உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுற்றுலா பயணியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது

சுற்றுலா பயணியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது

அரியாங்குப்பம் : கடலில், அலை சறுக்கு விளையாட வந்த சுற்றுலா பயணியிடம் சில்மிஷன் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு பெங்களூருவை சேர்ந்த 3 பெண்கள் நேற்று முன்தினம் அலை சறுக்கு விளையாட வந்தனர். அலை சறுக்கு விளையாட்டில், ஹூக்கு மாட்டி விடும் வாலிபர், விளையாட வந்த ஒரு பெண்ணிடம் சில்மிஷம் செய்தார். நடந்த சம்பவத்தை அவருடன் வந்த மற்ற பெண்களிடம் அவர் கூறினார். அந்த பெண் வாலிபரை கண்டித்ததுடன், அந்த வாலிபர் மீது அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.அதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், சில்மிஷத்தில் ஈடுபட்டவர் டி.என்.,பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், 18, என தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் உள்ள தனியார் நிறுவனத்தில், கடந்த ஒரு வாரத்திற்கு முன், வேலைக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ