உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பைக் திருடிய வாலிபர் கைது

 பைக் திருடிய வாலிபர் கைது

புதுச்சேரி: பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். உருளையன்பேட்டை, போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 3ம் தேதி 2 பைக்குகள் திருடுபோனது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, பைக் திருடிய நபரை தேடி வந்தனர். இது தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பைக்கை திருடி சென்ற நபரின் உருவம் பாதிவாகி இருந்தது. அந்த காட்சியை வைத்து போலீசார் விசாரித்ததில், அவர் வேலுாரை சேர்ந்த தாமோதரன், 30, என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவர் திருடி பதுங்கி வைத்திருந்த 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். அவரை, புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை