உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்களை கிண்டல் செய்த வாலிபர் கைது

பெண்களை கிண்டல் செய்த வாலிபர் கைது

அரியாங்குப்பம்:பள்ளி அருகே நின்று கொண்டு பெண்களை கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.அரியாங்குப்பம் போலீசார் வீராம்பட்டினம் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு உயர்நிலைப் பள்ளி அருகே வாலிபர் ஒருவர் நின்று கொண்டு, அவ்வழியாக செல்லும் பெண்களை கிண்டல் செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து, விசாரித்தனர்.அவர், வில்லினுார் அருகே உள்ள தொண்டாமாநத்தம் பகுதியை சேர்ந்த ராம்குமார், 21, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி