உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

புதுச்சேரி, ; வில்லியனுாரில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது கே.வி. நகர் அருகே வாலிபர் ஒருவர் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும், அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் 21, என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ