உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

 கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

புதுச்சேரி: கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். லாஸ்பேட்டை ஏர்போர்ட் பின்புறம் இடையாஞ்சாவடி சாலையில் வாலிபர் கத்தியை காட்டி அவ்வழியாக செல்பவர்களை மிரட்டுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து போலீசார் அந்த இடத்தில் கத்தியுடன் நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகரை சேர்ந்த சக்திவேல், 25; (எ) சத்யா என்பது தெரியவந்தது. அவரிடமிருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை