மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மக்களை மிரட்டிய வாலிபர் கைது
10-Jun-2026
புதுச்சேரி: கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று காலை ரோந்துப்பணியில் இருந்தனர். அப்போது, மூலக்குளம், ஜெ.ஜெ., நகர் 7 வது தெருவில், கத்தியுடன் ஒரு வாலிபர் பொதுமக்களை மிரட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் தப்பியோட முயன்றார். போலீசார் அவரை மடக்கி விசாரித்தனர். அந்த வாலிபர் மூலக்குளம், ஜெ.ஜெ., நகரை சேர்ந்த ஆண்டனி மகன் கித்தியோன், 22, என்பது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிந்து, கைது செய்தனர்.
10-Jun-2026