மேலும் செய்திகள்
ஆபாச பேச்சு வாலிபர் கைது
02-Feb-2026
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 29, என்பவர் மது போதையில் மங்கலம் - ஏம்பலம் சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
02-Feb-2026