பேனர் அகற்றாததை கண்டித்து இளைஞர் காங்., ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: அண்ணா திடலில், பா.ஜ.,வினர் வைத்துள்ள பேனர்களை அகற்றாமல் இருப்பதை கண்டித்து, இளைஞர் காங்., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம், கட்டப்பட்டுள்ள அண்ணா திடலில், விளையாட்டு அரங்கத்தை, கடந்த மாதம், மத்திய இணை அமைச்சர் திறந்து வைத்தார். தொடர்ந்து, சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி, பா.ஜ., சார்பில், விளையாட்டு, போட்டி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி, நடந்து ஒரு வாரம் ஆகியும், பா.ஜ., வினர் திடலில் வைத்துள்ள பேனர்களை அகற்றாமல் இருந்து வருகிறது. அதை கண்டித்து, விளையாட்டு திடல் முன்பு, புதுச்சேரி இளைஞர் காங்., சார்பில், மாநில தலைவர் ஆனந்தபாபு தலைமையில் நேற்று 12:00 மணியவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண் டனர்.