உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு

ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு

அரியாங்குப்பம்: மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட வாலிபர் ஆற்றில் மூழ்கி இறந்தார். அரியாங்குப்பம், சண்முகா நகரை சேர்ந்தவர் பெரியநாயகசாமி மகன் அந்தோணிராஜ், 38. இவர் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட நிலையில், அதற்காக மாத்திரை சாப்பிட்டு வந்தார். நேற்று முன்தினம் வெளியில் சென்றவர் வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அன்று மாலை வீராம்பட்டினம் உப்பனாற்று தண்ணீரில் மூழ்கி மயங்கி கிடந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி