உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நீச்சல் குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

நீச்சல் குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

வில்லியனுார்: சென்னை, கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் மதன் மகன் விஜயகுமார், 27; அங்குள்ள துணிக்கடையில் வேலை செய்தார். இவர் பிறந்த நாளை கொண்டாட நண்பர்கள் மற்றும் தனது உறவினர் குமாரவேல் மகன் வெஸ்லி, 19, ஆகியோருடன் கடந்த 21ம் தேதி புதுச்சேரிக்கு வந்தார். வில்லியனுார் அடுத்த உத்திரவாகினிப்பேட் தனியார் விடுதியில் தங்கி, அன்று இரவு பிறந்த நாள் கொண்டாடினர். சிறிது நேரத்தில் வெஸ்லிம் காணாமல் போனார். நண்பர்கள் தேடியபோது, விடுதி நீச்சல் குளத்தில் வெஸ்ஸி மயங்கி கிடந்தார். அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை