உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குடிப்பழக்கத்தால் வாலிபர் பலி

 குடிப்பழக்கத்தால் வாலிபர் பலி

புதுச்சேரி: கருவடிக்குப்பம், சண்முகா நகரை சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகன் ஆறுமுகம், 47; குடிபழக்கம் காரணமாக திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட ஆறுமுகம், நேற்று முன்தினம் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, உறவினர்கள் ஆறுமுகத்தை மீட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர், அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை