உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மயங்கி விழுந்த வாலிபர் சாவு

மயங்கி விழுந்த வாலிபர் சாவு

புதுச்சேரி: வீட்டில் மயங்கி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். முத்திரையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதனன், 32; நகைக் கடை ஊழியர். இவர் நேற்று காலை 8:30 மணியளவில் துாங்கி எழுந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ