மேலும் செய்திகள்
பெயின்டரை தாக்கி மிரட்டியவர் கைது
12-Oct-2026
புதுச்சேரி: கூலி தொழிலாளி கொலை வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுச்சேரி, அரியாங்குப்பம், சுப்பையா நகரை சேர்ந்தவர் சின்னத்தம்பி (எ) மூர்த்தி, 46. கூலி தொழிலாளி. இவரது மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான ராமச்சந்திரனின் தாய்க்கும் இடையே தெரு பைப்பில் துணி துவைப்பதில், கடந்த 2015ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி தகராறு ஏற்பட்டது. இதனை தட்டி கேட்ட மூர்த்தியை ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் கட்டையால் தாக்கினார். படு காயமடைந்த மூர்த்தி, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மறுநாள் 23ம் தேதி இறந்தார். இதுகுறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து ராமச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ரங்கநாதன் ஆஜரானார். வழக்கை விசாரித்த மூன்றாம் கூடுதல் அமர்வு நீதிபதி கோதண்டராஜ் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றவாளியான ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
12-Oct-2026