மேலும் செய்திகள்
கீரை வியாபாரி ரயில் மோதி பலி
07-Feb-2026
காரைக்கால்: காரைக்காலில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மனநிலை பாதித்தவர் ரயில் மோதி இறந்தார். காரைக்கால், கோவில்பத்து, காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர் மகாதீர் அலி, 31; மனநிலை பாதித்தனர். இவர், நேற்று மதியம், சந்தை திடல் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது காரைக்காலிருந்து பேரளம் சென்ற சரக்கு ரயில் அவர் மீது மோதி துாக்கி வீசப்பட்டார். மகாதீர் அலி உடல் தலை உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்தது. தகவல் அறிந்த நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
07-Feb-2026