இளைஞர் தலைமை பயிற்சி முகாம்
புதுச்சேரி: கேரளா மாநிலம் சாலக்குடியில், தேசிய இளைஞர் திட்டம் சார்பில், தென்னிந்திய அளவிலான இளைஞர் தலைமை பயிற்சி முகாம் நடந்தது. கேரள மாநிலத் தலைவர் சஜிர் பாபு வரவேற்றார். அறக்கட்டளையின் தலைவர் சுகுமாறன், தென் மாநிலத்தில் இருந்து பங்கேற்ற இளைஞர்களை அறிமுகப்படுத்தினார். நகர மன்ற தலைவர் சிபு வேலப்பன், நகர மன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுரேஷ் சிறப்புரை ஆற்றினர். திரிச்சூர் எம்.எல்.ஏ., சனீஸ்குமார் ஜோசப் முகாமை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். கேரளா, கோவா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். புதுச்சேரி மாநில இளைஞர் திட்டத்தின் மாநிலத் தலைவர் ஆதவன் தலைமையில் ஜெயப்பிரதா, யோகலட்சுமி கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற இளைஞர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.