உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இளைஞர் அமைதி மையம்: அரசுக்கு பாராட்டு

இளைஞர் அமைதி மையம்: அரசுக்கு பாராட்டு

புதுச்சேரி; கண்கள் மற்றும் உடல் தானம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு 10 நாட்களுக்குள் வாரிசு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்த வருவாய்த் துறைக்கு இளைஞர் அமைதி மையம் பாராட்டு தெரிவித்துள்ளது.மைய நிறுவனர் அரிமரி இளம்பரிதி அறிக்கை: உழவர்கரை தாசில்தார் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இறந்தவர்களின் கண்கள் மற்றும் உடல் தானம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு 10 நாட்களுக்குள் வாரிசு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.இதனால், பொதுமக்களிடையே கண்கள் மற்றும் உடல்தானம் செய்ய வேண்டும் என்ற சமூக அக்கறையும், சேவை எண்ணமும் உருவாகும். ஆக்கப்பூர்வமான, தொலை நோக்கான அரசின் அறிவிப்பால், பார்வையற்றவர்களுக்கு பார்வை கிடைக்கும். உடல் தானம் செய்பவர்களின் எண்ணிக்கையும் கூடுவதற்கு வாய்ப்பிருப்பதால், பயிற்சி மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். எனவே, இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் நடைமுறையில் இல்லாத திட்டத்தை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது பெருமைக்குரிய செயலாகும். இந்த முன்னோடித் திட்டத்தை மாநிலம் முழுதும் அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தால், பார்வையற்றவர்களும், மருத்துவ மாணவர்களும் பயன்பெறுவர். இத்திட்டத்தை அமல்படுத்திய அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை