உள்ளூர் செய்திகள்

 வாலிபர் தற்கொலை

காரைக்கால்: காரைக்கால், நிரவி, துாதுபோனமூலை, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் விக்னேஷ், 26; கூலி தொழிலாளி. இரண்டு ஆண்டுகளுக்கு முன், தனியார் குழுவில் கடன் வாங்கி பைக் வாங்கியுள்ளார். மாதம் ரூ. 4 ஆயிரம் தவணை கட்டவேண்டும். விக்னேஷ் சரியான முறையில் தவணை செலுத்தமுடியவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த விக்னேஷ் கடந்த 24ம் தேதி அதிகாலை களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கினார். புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். புகாரின் பேரில், நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை