உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்ணுக்கு கொலை மிரட்டல் வாலிபருக்கு வலை

பெண்ணுக்கு கொலை மிரட்டல் வாலிபருக்கு வலை

புதுச்சேரி: பெண்ணுக்கு தொடர்ந்து மொபைலில் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடிவருகின்றனர். புதுச்சேரி தனியார் விடுதியில் வேலை செய்து வரும் பெண். இவருக்கும் புதுச்சேரியை சேர்ந்த பவுல் ராக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவரது நடவடிக்கை சரியில்லததால் அந்த பெண் அவருடன் பேசுவதை நிறுத்தி கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பவுல்ராக் அந்த பெண்ணை இரும்பு பைப்பால் தாக்கிய வழக்கில், அவர் கைது செய்யப்பட்டு, சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியில் வந்தார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு மொபைல் மூலம் பவுல்ராக் தொடர்ந்து தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து, பவுல்ராக்கை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !