உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ரொம்ப பொய் சொல்லிட்டீங்களோ....

 ரொம்ப பொய் சொல்லிட்டீங்களோ....

புதுச்சேரி பா.ஜ., சார்பில் ஓட்டல் சன்வேயில் ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். முதலில் அமைச்சர் நமச்சிவாயம் பேசினார். கட்சி மேலிடம் புதுச்சேரியில் நடப்பதை எல்லாம் பார்த்து வருகிறது. வெற்றியை பெறுவது நமது நோக்கமாக இருக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., ஆட்சி நமது லட்சியம். ஆனால் கூட்டணி ஆட்சி நிச்சயம் என்றார். அடுத்து பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், அண்ணாமலையை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது நடுவில் சில நிமிடங்கள் திடீரென பேச்சை நிறுத்தினார். தொண்டை வறண்டு போய்ச்சு... கொஞ்சம் தண்ணீர் கொடுங்க என்றார். அப்போது மேடையில் இருந்த அண்ணாமலை, ராமலிங்கத்திடம் என்னை பற்றி ரொம்ப பொய் சொல்லிட்டீங்களோ... அதான் தண்ணீர் தாகம் எடுக்குது நினைக்கிறேன். சரி தண்ணீர் குடியுங்க என்று சொன்னதும், அரங்கத்தில் சிரிப்பலையும், கைதட்டல்களுடன் எழுந்தது அரங்கினை அதிர வைத்தது. இதை கண்ட மாநில தலைவர் ராமலிங்கம், உங்களை பற்றி பொய்யெல்லாம் சொல்லவில்லை. உண்மையை தான் பேசுகிறேன். உண்மையை பேசாமல் மேடையை விட்டு இறங்க மாட்டேன் என்று, மீண்டும் அண்ணாமலையை புகழ ஆரம்பித்தார். இதனால் மீண்டும் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்து, அடங்க வெகுநேரமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ