உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / ஆசிய பாட்மின்டன்: சாதிக்குமா இந்தியா * மீண்டும் களமிறங்குகிறார் சிந்து

ஆசிய பாட்மின்டன்: சாதிக்குமா இந்தியா * மீண்டும் களமிறங்குகிறார் சிந்து

ஷா ஆலம்: ஆசிய அணிகளுக்கான பாட்மின்டன் சாம்பியன்ஷிப் இன்று துவங்குகிறது. இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் பதக்கம் வெல்ல வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.ஆசிய பாட்மின்டன் கூட்டமைப்பு சார்பில் ஆசிய அணிகளுக்கான சாம்பியன்ஷிப் 2016 முதல் தொடர் நடத்தப்படுகிறது. இதன் ஐந்தாவது சீசன் இன்று மலேசியாவில் துவங்குகிறது. 15 அணிகள் மோதுகின்றன. இந்திய பெண்கள் அணி, 'டபிள்யு' பிரிவில் சீனாவுடன் இடம் பெற்றுள்ளது.கடந்த 2023, அக்.,ல் பிரெஞ்ச் ஓபன் தொடரில் காயத்தால் விலகிய சிந்து, மீண்டும் களமிறங்குகிறார். இவரது தலைமையிலான அணியில் அஷ்மிதா, ஆசிய ஜூனியர் தொடரில் வெள்ளி வென்ற 15 வயது தான்வி, இரட்டையரில் அஷ்வினி-தனிஷா, காயத்ரி-திரீஷா ஜோடி இடம் பெற்றுள்ளது. இதுவரை முடிந்த 4 தொடரில் இந்திய பெண்கள் அணி எந்த பதக்கமும் வெல்லவில்லை. இம்முறை இந்தியா பதக்கம் வெல்லும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பிரனாய் 'கேப்டன்'

இந்திய ஆண்கள் அணி 2016, 2020 என இரு முறை வெண்கலம் வென்றது தான் அதிகம். இம்முறை 'ஏ' பிரிவில் சீனா, ஹாங்காங் என வலிமையான அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற பிரனாய் தலைமையிலான இந்திய அணியில் லக்சயா சென், ஸ்ரீகாந்த், சிராக் சென், ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி இடம் பெற்றுள்ளனர். தாமஸ் கோப்பை தொடரில் சாம்பியன், ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற இந்திய ஆண்கள் அணி, இம்முறை சாதிக்கும் நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளது.நாளை நடக்கும் போட்டியில் இந்தியா-சீனா (பெண்கள்), இந்தியா-ஹாங்காங் (ஆண்கள்) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை