உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / போராடி வென்றார் லக்சயா * ஆல் இங்கிலாந்து பாட்மின்டனில்

போராடி வென்றார் லக்சயா * ஆல் இங்கிலாந்து பாட்மின்டனில்

பார்மிங்ஹாம்: ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் தொடர் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா, போராடி வெற்றி பெற்றார். இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் ('நம்பர்-10'), தைவானின் லி யங் ஷூ ('நம்பர்-35') மோதினர். முதல் செட்டை லக்சயா 13-21 என இழந்தார். பின் சுதாரித்துக் கொண்ட இவர், அடுத்த செட்டை 21-17 என கைப்பற்றினார். வெற்றியாளரை முடிவு செய்யும் மூன்றாவது, கடைசி செட்டில் 4-8 என பின்தங்கினார் லக்சயா. பின் அடுத்தடுத்து கேம்களை வசப்படுத்திய லக்சயா, 21-15 என வென்றார். முடிவில் 13-21, 21-17, 21-15 என போராடி வெற்றி பெற்றார். மாளவிகா கலக்கல்இந்தியாவின் பிரனாய், பிரான்சின் டோமோ போபோவை சந்தித்தார். இதில் பிரனாய் 19-21, 16-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் 28 வது இடத்திலுள்ள இந்தியாவின் மாளவிகா, 21-13, 10-21, 21-17 என 12வது இடத்திலுள்ள சிங்கப்பூரின் ஜியா மினை வீழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !