இஷாராணி இரண்டாவது இடம்
குயென் டி ஸ்டிரீட்: வியட்நாம் ஓபன் பாட்மின்டனில் இந்தியாவின் இஷாராணி இரண்டாவது இடம் பிடித்தார். வியட்நாமில், 'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற வியட்நாம் ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற, இந்தியாவின் இஷாராணி பருவா, தாய்லாந்தின் சாருன்ரக் விதித்சசர்னை எதிர்கொண்டார்.முதல் செட்டை இஷாராணி 8-21 என எளிதாக நழுவவிட்டார். இரண்டாவது செட்டில் போராட்டத்தை வெளிப்படுத்திய போதும், கடைசியில் 15-21 என கோட்டை விட்டார். 34 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இஷாராணி 8-21, 15-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பிடித்தார்.