மேலும் செய்திகள்
ஜப்பான் பாட்மின்டன்: காலிறுதியில் லக்சயா
13-Nov-2025
குமமோட்டோ: ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் அரையிறுதியில் இந்தியாவின் லக்சயா சென் தோல்வியடைந்தார். ஜப்பானில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகத் தரவரிசையில் 15 வது இடத்திலுள்ள இந்தியாவின் லக்சயா சென், 'நம்பர்-13' வீரர், ஜப்பானின் நிஷிமோட்டோவை எதிர்கொண்டார். முதல் செட்டை லக்சயா 19-21 என இழந்தார். இரண்டாவது செட்டில் சிறப்பாக செயல்பட்ட இவர், 21-14 என கைப்பற்றினார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது, கடைசி செட்டை 12-21 என எளிதாக நழுவவிட்டார். 77 நிமிடம் நடந்த போராட்டத்தின் முடிவில் லக்சயா, 19-21, 21-14, 12-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
13-Nov-2025