உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * மக்காவ் பாட்மின்டனில்...

இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * மக்காவ் பாட்மின்டனில்...

மக்காவ்: மக்காவ் ஓபன் சர்வதேச பாட்மின்டன் தொடர், மக்காவ் நகரில் நேற்று துவங்கியது. ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஹாங் இ, இங் சியாங் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 21-13, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.மற்றொரு போட்டியில் இந்தியாவின் அம்சகருணன், ரெத்தினசபாபதி ஜோடி 21-15, 19-21, 14-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அய்ஜவா, சானோ ஜோடியிடம் போராடி தோல்வியடைந்தது.பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் காயத்ரி, திரீஷா ஜோடி 21-16, 22-22, 15-21 என தைவானின் ஜியாவோ மின், யு வெய் ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஷ்ருதி, பிரியா ஜோடி 21-15, 16-21, 21-17 என தைவானின் ஜி ஹுவாங், வாங் ஜோடியை வென்றது.'டாப்-10' பட்டியலில்...பாட்மின்டன் தரவரிசை பட்டியல் நேற்று வெளியானது. ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 3 இடம் முன்னேறி, 3 மாதத்துக்குப் பின் 'டாப்-10' பட்டியலில் மீண்டும் நுழைந்தது. தற்போது 10 வது இடத்தில் உள்ளது.ஆண்கள் ஒற்றையரில் லக்சயா சென் 17வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு வீரர் பிரனாய், 33வது இடம் பிடித்தார்.பெண்கள் ஒற்றையரில் சிந்து 15வது, 17 வயது உன்னதி 31 வது இடங்களில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ