மேலும் செய்திகள்
பாட்மின்டன்: அசத்துமா இந்தியா
02-Feb-2026
கோப்பை வென்றார் தேவிகா: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்
01-Feb-2026 | 1
பாட்மின்டன்: பைனலில் தேவிகா
31-Jan-2026
தாய்லாந்து பாட்மின்டன்: அரையிறுதியில் தேவிகா
30-Jan-2026
முல்ஹெய்ம்: ஜெர்மன் ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் சதிஷ் குமார் வெற்றி பெற்றார்.ஜெர்மனியில் 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற ஜெர்மன் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், இஸ்ரேலின் மிஷா ஜில்பெர்மன் மோதினர். முதல் செட்டை 21-18 எனக் கைப்பற்றிய சதிஷ் குமார், இரண்டாவது செட்டை 19-21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்ட இவர் 21-19 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். முடிவில் சதிஷ் குமார் 21-18, 19-21, 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் திரீஷா, காயத்ரி கோபிசந்த் ஜோடி 18-21, 21-11, 21-13 என சீனதைபேயின் யின்-ஹுய் ஹசு, ஜி யுன் லின் ஜோடியை வீழ்த்தியது.மற்றொரு போட்டியில் இந்தியாவின் ருதுபர்ணா, ஸ்வேதாபர்ணா ஜோடி 17-21, 21-10, 14-21 என ஜெர்மனியின் அமேலி லெஹ்மான் காரா சீப்ரெக்ட் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
02-Feb-2026
01-Feb-2026 | 1
31-Jan-2026
30-Jan-2026