மேலும் செய்திகள்
ஜூனியர் பாட்மின்டன்: காலிறுதியில் இந்தியா
08-Oct-2025
கவுகாத்தி: உலக ஜூனியர் பாட்மின்டனில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது. அரையிறுதியில் 0-2 என, இந்தோனேஷியாவிடம் தோல்வியடைந்தது.அசாமின் கவுகாத்தியில், கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் காலிறுதியில் தென் கொரியாவை வீழ்த்திய இந்தியா, முதன்முறையாக பதக்கத்தை உறுதி செய்து வரலாறு படைத்தது.அரையிறுதியில் இந்தியா, 'நடப்பு சாம்பியன்' இந்தோனேஷியா அணிகள் மோதின. உன்னதி ஹூடா, பார்கவ் ராம், விஸ்வா தேஜ், விஷாகா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள இந்திய அணி 0-2 (35-45, 21-45) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப்பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தது. இது, கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டனில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் ஆனது.வரும் அக். 13 முதல் தனிநபர் பிரிவு போட்டிகள் நடக்கவுள்ளன.
08-Oct-2025