உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / லக்சயா சென் ஏமாற்றம்: பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டனில்

லக்சயா சென் ஏமாற்றம்: பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டனில்

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் லக்சயா சென் தோல்வியடைந்தார்.பிரான்சில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-22' இந்தியாவின் லக்சயா சென் 22, உலகின் 'நம்பர்-2' டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சென் 30, மோதினர். முதல் செட்டில் ஒருகட்டத்தில் 20-17 என முன்னிலை வகித்த லக்சயா சென், 20-22 என போராடி இழந்தார். தொடர்ந்து ஏமாற்றிய இவர், இரண்டாவது செட்டை 14-21 எனக் கோட்டைவிட்டார்.மொத்தம் 54 நிமிடம் நீடித்த போட்டியில் லக்சயா சென் 20-22, 14-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இன்று நடக்கும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் லக்சயா சென், மலேசியாவின் லீ ஜி ஜியா மோதுகின்றனர். இதில் லக்சயா சென் வெற்றி பெறும் பட்சத்தில், ஒலிம்பிக் பாட்மின்டனில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற ஆகலாம். இதுவரை இந்திய வீராங்கனைகளான சிந்து 2 (2016ல் வெள்ளி, 2020ல் வெண்கலம்), செய்னா நேவல் ஒரு (2012ல் வெண்கலம்) பதக்கம் வென்றுள்ளனர்.'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய ஆக்சல்சென், மீண்டும் பைனலுக்கு முன்னேறினார். இதில் தாய்லாந்தின் குன்லவுட் விடித்சார்னை எதிர்கொள்கிறார்.லக்சயா சென் கூறுகையில், ''பைனலுக்கு முன்னேற முடியாதது ஏமாற்றம். அரையிறுதியில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் முழுத்திறமையை வெளிப்படுத்துவேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Neutrallite
ஆக 05, 2024 11:46

ஏமாற்றம் என்று சொல்ல வேண்டாம். அவர் வயதை பாருங்கள். அதோடு, வெற்றி பெற்றவர் உலக சாம்பியன். அந்த உலக சாம்பியனே லக்ஷயா அடுத்த ஒலிம்பிக்கில் தங்கத்துக்கு போட்டியிடுவார் என்று கூறியிருக்கிறார்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை