உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / பாட்மின்டன்: அரையிறுதியில் லக்சயா

பாட்மின்டன்: அரையிறுதியில் லக்சயா

ஷென்சென்: கிங் கோப்பை பாட்மின்டன் அரையிறுதிக்கு இந்தியாவின் லக்சயா சென் முன்னேறினார்.சீனாவில், கிங் கோப்பை சர்வதேச பாட்மின்டன் முதல் சீசன் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், சீனாவின் அங்கஸ் கா லாங் மோதினர். முதல் செட்டை 10-21 என இழந்த லக்சயா சென், பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 21-13 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய இவர் 21-13 என வென்றார்.முடிவில் லக்சயா சென் 10-21, 21-13, 21-13 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ