உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / மாளவிகா சாம்பியன் *அஜர்பெய்ஜான் பாட்மின்டனில்

மாளவிகா சாம்பியன் *அஜர்பெய்ஜான் பாட்மின்டனில்

பாகு: அஜர்பெய்ஜான் பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் மாளவிகா கோப்பை வென்றார்.அஜர்பெய்ஜானில் சர்வதேச பாட்மின்டன் சாலஞ்ச் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மாளவிகா, அரையிறுதியில் சக வீராங்கனை அனுபமாவை வென்று, நீண்ட இடைவெளிக்குப் பின் (இத்தாலி தொடர், 2022, ஜூன்) பைனலுக்கு முன்னேறினார்.பைனலில் மீண்டும் சக வீராங்கனை தான்யாவை சந்தித்தார். முதல் செட்டை 21-15 என கைப்பற்றினார் மாளவிகா. இரண்டாவது செட் இழுபறியாக இருந்தது. கடைசியில் மாளவிகா 22-20 என வசப்படுத்தினார். முடிவில் மாளவிகா 21-15, 22-20 என நேர் செட்டில் வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றினார்.973 நாள்மாளவிகா கடைசியாக 2021 ல் லிதுவேனியா தொடரில் தங்கம் வென்றார். கடந்த ஆண்டு டெங்கு, டைபாய்டு காய்ச்சலால் அவதிப்பட்டு மீண்டு வந்தார். தற்போது 973 வது நாளில் மீண்டும் சர்வதேச தொடரில் மாளவிகா தங்கம் கைப்பற்றி அசத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை