உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / பிரமோத் பகத் அபாரம்: உலக பாரா பாட்மின்டனில்

பிரமோத் பகத் அபாரம்: உலக பாரா பாட்மின்டனில்

பட்டயா: உலக 'பாரா' பாட்மின்டன் பைனலுக்கு இந்தியாவின் பிரமோத் பகத், கிருஷ்ணா நாகர், சுஹாஸ் யதிராஜ் முன்னேறினர்.தாய்லாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா' பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல். 3' பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரமோத் பகத், மனோஜ் சர்க்கார் மோதினர். அபாரமாக ஆடிய பிரமோத் பகத் 23-21, 20-22, 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல். 4' பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சுஹாஸ் யதிராஜ் 21-16, 21-19 என பிரான்சின் லுாகாஸ் மசூரை வீழ்த்தினார். ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.ஹெச். 4' பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் 21-16, 21-17 என பிரேசிலின் விக்டர் காங்கால்வ்ஸ் டவேரசை தோற்கடித்தார்.பெண்கள் ஒற்றையர் 'எஸ்.யு. 5' அரையிறுதியில் இந்தியாவின் மணிஷா ராமதாஸ் 19-21, 21-12, 21-14 என பிரான்சின் லெபோர்ட்டை வென்றார்.மற்ற அரையிறுதியில் இந்தியாவின் நிதிஷ் குமார் (எஸ்.எல். 3), சுகந்த் கடம் (எஸ்.எல். 4), மானசி ஜோஷி (பெண்கள் எஸ்.எல். 3), பாலக் கோலி (பெண்கள் எஸ்.எல். 4), நித்யா ஸ்ரீ சுமதி சிவன் (பெண்கள் எஸ்.ஹெச். 6) தோல்வியடைந்தனர்.ஆண்கள் இரட்டையர் 'எஸ்.எல். 3 - எஸ்.எல். 4' அரையிறுதியில் இந்தியாவின் பிரமோத் பகத், சுகந்த் கடம் ஜோடி தோல்வியடைந்து வெண்கலம் வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ