பைனலில் சாத்விக்-சிராக்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்
ஷென்சென்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டன் பைனலுக்கு இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியது.சீனாவில், 'சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் நுார் முகமது அஸ்ரியன், வீ கியோங் டான் ஜோடியை சந்தித்தது.முதல் செட்டை 21-16 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 18-21 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்ட இந்திய ஜோடி 21-11 என வென்றது. ஒரு மணிநேரம், 6 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சாத்விக்சாய்ராஜ், சிராக் ஜோடி 21-16, 18-21, 21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.