உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / அஷ்வின் வீசிய கேரம் பால்: பிரதமர் மோடி உருக்கம்

அஷ்வின் வீசிய கேரம் பால்: பிரதமர் மோடி உருக்கம்

புதுடில்லி: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், 38, சமீபத்தில் ஓய்வு பெற்றார். தமிழகத்தை சேர்ந்த இவர், 14 ஆண்டுகள் விளையாடினார். 106 டெஸ்டில், 537 விக்கெட், 3,503 ரன் எடுத்தார்.அஷ்வினுக்கு, பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில்,'உங்களது ஓய்வு அறிவிப்பு இந்தியா, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. உங்களிடம் இருந்து நிறைய 'ஆப்-பிரேக்' பந்துகளை எதிர்நோக்கிய நிலையில், ஓய்வு எனும் 'கேரம்பால்' வீசியுள்ளீர்கள். உங்கள் முடிவு கடினமானது. இதனை ரசிகர்கள் புரிந்துகொள்வர்.நீங்கள் ஓய்வு பெற்ற நிலையில் 'ஜெர்சி எண் 99' உங்களது இழப்பை உணரவைக்கும். உங்களது சாதனைகள் என்றும் மனதில் நிலைத்திருக்கும். பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அணியின் வெற்றிக்கு கைகொடுத்து 'ஆல்-ரவுண்டராக' ஜொலித்தீர்கள். சிட்னி டெஸ்டில் (2021) துணிச்சலாக போராடி அணியை தோல்வியின் பிடியில் இருந்து மீட்டதை மறக்க முடியாது.இக்கட்டான தருணங்களில் அணியின் நலனுக்கு முன்னுரிமை அளித்தீர்கள். உங்கள் தாயார் மருத்துவமனையில் இருந்த போதும், சென்னை வெள்ளத்தில் சிக்கிய உங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியாத போதும் நீங்கள் விளையாடியதை அனைவரும் நினைவில் கொள்கிறோம். உங்களது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்,'என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ