மேலும் செய்திகள்
வங்கதேச அணி வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்
16-Dec-2024
கோலாலம்பூர்: யூத் ஆசிய கோப்பை போட்டியில் இந்திய பெண்கள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. மலேசியாவில் பெண்களுக்கான யூத் ஆசிய கோப்பை (19 வயது) 'டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் தற்போது 'சூப்பர்-4' சுற்று போட்டி நடக்கின்றன. நேற்று நடந்த போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்தியா, பீல்டிங் தேர்வு செய்தது. வங்கதேச அணிக்கு சோயா (10), ஈவா (14) ஜோடி துவக்கம் தந்தது. அடுத்து 3 முதல் 8 வரையிலான பேட்டர்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்னை கடக்கவில்லை. பின் வரிசையில் நிஷிதா 10 ரன் எடுத்தார். வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 80 ரன் மட்டும் எடுத்தது. இந்தியா சார்பில் ஆயுஷி 3, சோனம் 2 விக்கெட் சாய்த்தனர்.திரிஷா அபாரம்எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு திரிஷா, கமலினி (0) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. சனிகா (1) ஏமாற்றினார். பின் இணைந்த திரிஷா, கேப்டன் நிகி ஜோடி அணியை வெற்றிக்கு கொண்டு சென்றது. திரிஷா அரைசதம் அடித்தார். இந்திய அணி 12.1 ஓவரில் 86/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அரைசதம் அடித்த திரிஷா (58), நிதி (22) அவுட்டாகாமல் இருந்தனர்.
16-Dec-2024