மேலும் செய்திகள்
வெ.இண்டீசை வீழ்த்தியது ஆஸி.,
27-Jun-2025
செயின்ட் ஜார்ஜ்: இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய 133 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 286, வெஸ்ட்இண்டீஸ் 253 ரன் எடுத்தன. பின் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கேமிரான் கிரீன் (52), ஸ்டீவ் ஸ்மித் (71) அரைசதம் கடந்து கைகொடுத்தனர். மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 221/7 ரன் எடுத்திருந்தது.நான்காம் நாள் ஆட்டத்தில் அலெக்ஸ் கேரி (30) ஆறுதல் தந்தார். ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 243 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஸ்டார்க் (13) அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமார் ஜோசப் 4 விக்கெட் சாய்த்தார்.விக்கெட் சரிவு: பின், 277 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிரெய்க் பிராத்வைட் (7), ஜான் கேம்ப்பெல் (0) ஏமாற்றினர். கீசி கார்டி (10), பிரண்டன் கிங் (14) நிலைக்கவில்லை. கேப்டன் ராஸ்டன் சேஸ் (34) ஓரளவு கைகொடுத்தார்.ஷாய் ஹோப் (17), ஜஸ்டின் கிரீவ்ஸ் (2), அல்சாரி ஜோசப் (12) ஏமாற்றினர். ஷமார் ஜோசப் (24) ஆறுதல் தந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 143 ரன்னுக்கு சுருண்டு, 133 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க், லியான் தலா 3 விக்கெட் சாய்த்தனர். ஆஸ்திரேலிய அணி தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை பெற்றது.
27-Jun-2025