உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / வங்கதேசம் இன்னிங்ஸ் வெற்றி: டெஸ்ட் தொடர் சமன்

வங்கதேசம் இன்னிங்ஸ் வெற்றி: டெஸ்ட் தொடர் சமன்

சாட்டோகிராம்: ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டெஸ்டில் அசத்திய வங்கதேச அணி இன்னிங்ஸ், 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் 1-1 என சமன் ஆனது.வங்கதேசம் சென்ற ஜிம்பாப்வே அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே வென்றது. இரண்டாவது டெஸ்ட் சாட்டோகிராமில் நடந்தது. ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 227 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 291/7 ரன் எடுத்திருந்தது.மூன்றாம் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு தைஜுல் (20), தன்ஜிம் ஹசன் சாகிப் (41) ஓரளவு கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய மெஹிதி ஹசன் மிராஸ் (104) சதம் கடந்தார். வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 444 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஜிம்பாப்வே சார்பில் வின்சன்ட் மசேகெசா 5 விக்கெட் சாய்த்தார்.பின் 2வது இன்னிங்சை துவக்கிய ஜிம்பாப்வே அணிக்கு, வங்கதேச பவுலர்கள் தொல்லை தந்தனர். தைஜுல் பந்தில் பிரையன் பென்னட் (6), நிக் வெல்ச் (0) அவுட்டாகினர். பெர் கர்ரான் (46), கேப்டன் கிரெய்க் எர்வின் (25) ஆறுதல் தந்தனர். மெஹிதி ஹசன் மிராஸ் 'சுழலில்' வெஸ்லி மாதேவரே (0), டிசிகா (0), வெலிங்டன் மசகட்சா (10) சிக்கினர்.ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சில் 111 ரன்னுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. வங்கதேச சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 5, தைஜுல் 3 விக்கெட் சாய்த்தனர். இரு அணிகளும் கோப்பை பகிர்ந்து கொண்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி