உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / பும்ரா மீண்டும் நம்பர்-1: டெஸ்ட் பவுலர் தரவரிசையில்

பும்ரா மீண்டும் நம்பர்-1: டெஸ்ட் பவுலர் தரவரிசையில்

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பவுலர் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா, மீண்டும் முதலிடம் பிடித்தார்.டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 883 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து மீண்டும் 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். பெர்த் டெஸ்டில் 'வேகத்தில்' மிரட்டிய இவர், இரு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட் சாய்த்து, ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.முதலிரண்டு இடத்தில் இருந்த தென் ஆப்ரிக்காவின் ரபாடா (872 புள்ளி), ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட் (860) முறையே 2, 3வது இடத்துக்கு தள்ளப்பட்டனர். இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் (807) 5வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறினார். பெர்த் டெஸ்டில் 5 விக்கெட் கைப்பற்றிய மற்றொரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் (598), 3 இடம் முன்னேறி 25வது இடத்தை கைப்பற்றினார்.ஜெய்ஸ்வால் 'நம்பர்-2': பெர்த் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் 161 ரன் விளாசிய இந்திய துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 825 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்து 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறினார். இப்போட்டியில் சதம் விளாசிய இந்தியாவின் விராத் கோலி (689), 9 இடங்கள் முன்னேறி 13வது இடம் பிடித்தார். ரிஷாப் பன்ட் (736) 6வது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (903) உள்ளார்.'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (423), அஷ்வின் (290) முதலிரண்டு இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ