உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / காஸ்ட்லி வீராங்கனை தீப்தி: பிரிமியர் லீக் ஏலத்தில்

காஸ்ட்லி வீராங்கனை தீப்தி: பிரிமியர் லீக் ஏலத்தில்

புதுடில்லி: பிரிமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா, ரூ. 3.2 கோடிக்கு உ.பி., அணியில் ஒப்பந்தமானார்.இந்தியாவில், வரும் ஜன. 9ல் பெண்களுக்கான பிரிமியர் லீக் ('டி-20') 4வது சீசன் துவங்குகிறது. போட்டிகள் நவி மும்பை, வதோதராவில் நடக்கவுள்ளன. பைனல், பிப். 5ல் வதோதராவில் நடக்கும்.இத்தொடருக்கான வீராங்கனைகள் 'மெகா' ஏலம் டில்லியில் நடந்தது. இதில் 277 பேர் (194 இந்திய, 83 வெளிநாட்டு வீராங்கனைகள்) ஏலத்தில் வந்தனர். நியூசிலாந்தின் சோபி டெவினை, குஜராத் அணி ரூ. 2 கோடிக்கு தட்டிச் சென்றது.'காஸ்ட்லி' தீப்தி: சமீபத்திய உலக கோப்பையில் (50 ஓவர்) தொடர் நாயகி விருது வென்ற இந்திய 'ஆல்-ரவுண்டர்' தீப்தி சர்மாவை (ரூ. 50 லட்சம் அடிப்படை தொகை) வாங்க டில்லி அணி ரூ. 3.2 கோடி வரை முன்வந்தது. ஆனால் உ.பி., அணி 'ரைட் டூ மேட்ச்' கார்டை பயன்படுத்தி தீப்தியை ரூ. 3.2 கோடிக்கு தக்கவைத்துக் கொண்டது. இந்திய வீராங்கனை ஷிகா பாண்டே, ரூ. 2.40 கோடிக்கு உ.பி., அணியில் ஒப்பந்தமானார்.நியூசிலாந்தின் அமெலியா கெர், ரூ. 3 கோடிக்கு மும்பை அணியில் ஒப்பந்தமானார். ஆஸ்திரேலியாவின் மேக் லானிங் (ரூ. 1.9 கோடி, உ.பி.,), தென் ஆப்ரிக்காவின் லாரா வால்வோர்ட் (ரூ. 1.1 கோடி, டில்லி), ஆஸ்திரேலியாவின் லிட்ச்பீல்டு (ரூ. 1.2 கோடி, உ.பி.,), இந்தியாவின் ஸ்ரீ சரணி (ரூ. 1.3 கோடி, டில்லி) உள்ளிட்டோர் பல்வேறு அணிகளில் ஒப்பந்தமாகினர். 'டாப்-5' பட்டியல்ஏலத்தில் அதிக விலைக்கு ஒப்பந்தமான 'டாப்-5' வீராங்கனைகள்.வீராங்கனை அணி தொகைதீப்தி/இந்தியா உ.பி., ரூ. 3.2 கோடிஅமெலியா/நியூசி., மும்பை ரூ. 3 கோடிஷிகா/இந்தியா உ.பி., ரூ. 2.40 கோடிடெவின்/நியூசி., குஜராத் ரூ. 2 கோடிலானிங்/ஆஸி., உ.பி., ரூ. 1.90 கோடிவிலை போகாதவர்கள்ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி, கிரேஸ் ஹாரிஸ், அலானா கிங், டார்சி பிரவுன், நியூசிலாந்தின் இசபெல்லா, தென் ஆப்ரிக்காவின் தஸ்னிம் பிரிட்ஸ், இந்தியாவின் உமா செத்ரி, அமன்தீப் கவுர் உள்ளிட்டோரை வாங்க எந்த ஒரு அணியும் முன்வரவில்லை.தக்கவைக்கப்பட்டவர்கள்பிரிமியர் லீக் தொடரில் தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகளின் விபரம்.டில்லி: ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷைபாலி வர்மா, அனாபெல் சுதர்லாந்து, மரிஜான்னே காப், நிக்கி பிரசாத்குஜராத்: ஆஷ்லி கார்ட்னர், பெத் மூனேமும்பை: ஹர்மன்பிரீத் கவுர், நாட்-சிவர் புருன்ட், அமன்ஜோத் கவுர், கமலினி, ஹேலி மாத்யூஸ்பெங்களூரு: ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், எல்லிஸ் பெர்ரி, ஷ்ரேயங்கா பாட்டீல்உ.பி.,: ஷ்வேதா ஷெராவத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !