வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஸ்போர்ட்ஸ் வேறு ,அரசியல் வேறு , என்ற நிலைப்பாடு வேண்டும்.
கராச்சி: சாம்பியன்ஸ் டிராபியில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடக்கின்றன. இன்று தனது கடைசி லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதன் முடிவுக்கு ஏற்ப, 'ஏ' பிரிவில் இந்திய அணியின் நிலை தெரியவரும்.இதன் பின் மார்ச் 4ம் தேதி துபாயில் நடக்கும் முதல் அரையிறுதியில், இந்திய அணியுடன், தென் ஆப்ரிக்கா அல்லது ஆஸ்திரேலியா மோதும். இதனால் கராச்சியில் இருந்து ஆஸ்திரேலியா, லாகூரில் இருந்து நியூசிலாந்து அணிகள் துபாய் செல்கின்றன.அரையிறுதிக்கு தயாராக கூடுதல் நேரம் கிடைக்கும் என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக ஐ.சி.சி., தெரிவித்துள்ளது. இன்றைய நியூசிலாந்து மோதலுக்குப் பின், மார்ச் 5ல் நடக்கும் அரையிறுதிக்காக ஏதாவது ஒரு அணி மீண்டும் லாகூர் செல்ல வேண்டும்.அடுத்து அரையிறுதியில் இந்தியா வெல்லும் பட்சத்தில், பைனல் துபாயில் மார்ச் 9ல் நடத்தப்படும். இதனால் லாகூரில் நடக்கும் அரையிறுதியில் வெல்லும் அணி, மீண்டும் பைனலுக்காக துபாய் வர வேண்டும்.ஒருவேளை அரையிறுதியில் இந்திய அணி தோற்றால், லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் பைனல் (மார்ச் 9) நடக்கும்.
ஸ்போர்ட்ஸ் வேறு ,அரசியல் வேறு , என்ற நிலைப்பாடு வேண்டும்.