வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எளிதாக வெல்ல முடியும் என்று நினைக்காமல், இந்திய அணியின் பலம் மற்றும் திறமையை வெளிப்படுத்தி எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்ற கோப்பையை வெல்ல வாழ்த்துகிறேன்
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில், வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது. துபாயில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேசம் பீல்டிங் தேர்வு செய்தது.வங்க தேச அணியின் சவுமியா சர்கார் (0), கேப்டன் நஜ்முல் ஷாண்டோ (0) என இருவரும் 'டக்' அவுட்டாகினர். மெஹிதி ஹசன் 5 ரன் எடுத்தார். 9வது ஓவரை வீசிய அக்சர் படேல், 2வது பந்தில் தன்ஜித் (25), 3வது பந்தில் முஷ்பிகுரை (0) அவுட்டாக்கினார். ஜேக்கர் அலி 68 ரன் எடுக்க, தவ்ஹித் (100) சதம் அடித்து அவுட்டானார். வங்கதேச அணி 49.4 ஓவரில் 228 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவின் ஷமி 5, ஹர்ஷித் 3, அக்சர் 2 விக்கெட் சாய்த்தனர்.பின் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் (41), கோலி (22), ஸ்ரேயாஸ் (15) நிலைக்கவில்லை. அக்சர் 8 ரன் எடுத்தார். சுப்மன் கில் சதம் விளாசினார். கடைசியில் ராகுல் ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 46.3 ஓவரில் 231/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சுப்மன் (101), ராகுல் (41) அவுட்டாகாமல் இருந்தனர்.
எளிதாக வெல்ல முடியும் என்று நினைக்காமல், இந்திய அணியின் பலம் மற்றும் திறமையை வெளிப்படுத்தி எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்ற கோப்பையை வெல்ல வாழ்த்துகிறேன்