உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / செஸ்: நிஹால், பிரனேஷ் அபாரம்

செஸ்: நிஹால், பிரனேஷ் அபாரம்

சென்னை: சென்னையில், கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. நேற்று 7 வது சுற்று போட்டிகள் நடந்தன. மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன், நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதினர்.இப்போட்டி 35வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இந்தியாவின் நிஹால் சரின், அமெரிக்காவின் ராய் ராப்சனை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய நிஹால், 43 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். ஜெர்மனியின் வின்சென்ட், அமெரிக்காவின் அவாண்டரை வென்றார். இந்தியாவின் விதித் குஜ்ராத்தி, சக வீரர் கார்த்திகேயன் முரளியிடம் தோல்வியடைந்தார். 7 சுற்று முடிவில் வின்சென்ட் (5.5), அர்ஜுன் (4.0), கார்த்திகேயன் (4.0) முதல் 3 இடத்தில் உள்ளனர்.பெண்கள் தோல்விசாலஞ்சர்ஸ் பிரிவில் 10 இந்திய நட்சத்திரங்கள் விளையாடுகின்றனர். ஹரிகா, ஹர்ஷவர்தனிடம் தோல்வியடைந்தார். வைஷாலி, பிரனேஷிடம் வீழ்ந்தார். லியான் மெடோன்கா, திப்தயனை வீழ்த்தினார். 5.5 புள்ளியுடன் பிரனேஷ், லியான் முதல் இரு இடத்தில் உள்ளனர். அபிமன்யு (5.0) 3வதாக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை