வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்போ முதல்முறையும் அல்வா கொடுத்து அனுப்பியிருக்கு ஆஸ்பிடல்
தாகா: மைதானத்தில் மாரடைப்பு ஏற்பட, மயங்கி சரிந்த தமிம் இக்பால், தீவிர சிகிச்சையில் உள்ளார்.வங்கதேச அணி முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் 36. கடந்த ஜனவரி மாதம் சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார். வங்கதேச பிரிமியர் டிவிசன் தொடரில் (50 ஓவர்) முகமதன் ஸ்போர்ட்டிங் கிளப் அணி கேப்டனாக உள்ளார். ஷினேபுகுர் அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்தார். ஒரு ஓவர் வீசப்பட்ட நிலையில், தமிம் நெஞ்சு வலி ஏற்பட்டதை உணர்ந்தார். உடனே மைதானத்தை விட்டு வெளியேறிய இவர், அருகிலுள்ள கே.பி.ஜே., மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை எடுத்தார். மீண்டும் விளையாட செல்லவேண்டாம் என்ற டாக்டர்கள் கோரிக்கையை ஏற்காத தமிம், மறுபடியும் மைதானம் திரும்பினார். இருப்பினும் தமிமை தாகா அழைத்துச் செல்ல, அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர், ஏர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்திருந்தார். இரண்டாவது முறைஇந்நிலையில் தமிமிற்கு, இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட, மைதானத்தில் மயங்கினார். அவரது இதயத்தை மீண்டும் துடிக்கச் செய்ய, உடனடியாக சி.பி.ஆர்., மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டது. 'ஏர் ஆம்புலன்சில்' செல்லும் அளவுக்கு தமிம் உடல்நிலை இல்லாததால், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, ஏற்கனவே சென்ற மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் தமிம்.இவரது ரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு அடைப்பு அகற்றப்பட்டன. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.கே.பி.ஜே., மருத்துவமனை டாக்டர் ஹாஜிப் ஹசன் கூறுகையில்,'' இரண்டாவது முறையாக தமிம் வந்த போது, மோசமான நிலையில் இருந்தார். ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு அடைப்பு சரி செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
அப்போ முதல்முறையும் அல்வா கொடுத்து அனுப்பியிருக்கு ஆஸ்பிடல்