உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சுப்மன் கில் பெயர் பரிந்துரை * ஐ.சி.சி., விருதிற்கு...

சுப்மன் கில் பெயர் பரிந்துரை * ஐ.சி.சி., விருதிற்கு...

துபாய்: ஐ.சி.சி., விருதுக்கு இந்தியாவின் சுப்மன் கில் பரிந்துரைக்கப்பட்டார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்திற்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் சுப்மன் கில், மூன்றாவது முறையாக பரிந்துரை செய்யப்பட்டார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசம் (101 ரன்), பாகிஸ்தானுக்கு (46) எதிராக விளாசிய இவர், இந்தியா பைனலுக்கு செல்ல கைகொடுத்தார்.முன்னதாக கடந்த 2023 ல் (ஜனவரி, செப்டம்பர்) இரு முறை சுப்மன் சிறந்த வீரர் ஆனார். தற்போது தேர்வானால் மூன்று முறை சிறந்த வீரரான முதல் இந்தியர் ஆகலாம். தவிர, பிப்ரவரி மாத விருதுக்கு ஆஸ்திரேலியாவின் ஸ்மித் (இலங்கை டெஸ்ட் தொடரில் 141, 131, ரன்), நியூசிலாந்தின் பிலிப்ஸ் (கடைசி 5 போட்டியில் 236 ரன்) பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டன. சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு தாய்லாந்தின் திபாச்சா, ஆஸ்திரேலியாவின் அலானா கிங், அனாபெல் என மூன்று பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ