மேலும் செய்திகள்
குபேரா - டிரைலர்
16-Jun-2025
துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அறிவித்துள்ள புதிய விதிகள்.* 'மூளை அதிர்ச்சி' ஏற்பட்ட வீரரின் பாதுகாப்பு, குணமடைய அவகாசம் தரும் வகையில், குறைந்தது 7 நாள் ஓய்வில் இருக்க வேண்டும். பிறகு தான் வேறு போட்டியில் களமிறங்க வேண்டும்.* தவிர மாற்று வீரர் யார் என்பதை ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாக தெரிவிக்க வேண்டும். இவை வரும் அக்டோபர் மாதம் நடைமுறைக்கு வரவுள்ளது. * பேட்டர் தனது நிலையில் இருக்கும் போது, கிரீசை விட்டு விலகிச் செல்லும் பந்துகளுக்கு 'வைடு' தரப்பட்டது. தற்போது, வீரர்கள் 'ஆப் சைடு' நோக்கி நகரும் போது அவரது கால்கள் இருக்கும் இடத்தை கவனித்து 'வைடு' வழங்கப்பட உள்ளது. * டெஸ்டில் தற்போது தினமும் 90 ஓவர்கள் வீசாமல் தாமதம் செய்கின்றனர். இதைக் தடுக்க 'ஸ்டாப் கிளாக்' அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால் ஓவர்களுக்கு இடையில் 60 வினாடி மட்டும் எடுத்துக் கொள்ளலாம். 80 ஓவர்களுக்குள் இருமுறைக்கும் மேல் தாமதம் ஆனால் 'பெனால்டியாக' எதிரணிக்கு 5 ரன் வழங்கப்படும். * ரன் எடுக்கும் போது கிரீசை தொடாமல் சென்றால், எதிரணிக்கு 5 ரன் வழங்கப்படும். தவிர, இரு பேட்டர்களில் யார் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை பவுலிங் அணி கேப்டன் முடிவு செய்வார். * 'வைடு', அவுட் போன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய பேட்டர் அல்லது பவுலிங் அணி கேப்டன் என இருவரும் அடுத்தடுத்து 'டி.ஆர்.எஸ்.,' முறையில் அப்பீல் செய்கின்றனர். இனிமேல் முதலில் கேட்பவர் அப்பீல் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும்.* பந்தில் எச்சில் பயன்படுத்தி, மாற்றம் செய்ய வைக்கும் முயற்சிக்கு தடை வந்து விட்டது. இனிமேல் எச்சில் பயன்படுத்தி இருந்தாலும், பந்தை மாற்றுவது குறித்து அம்பயர் தான் முடிவெடுப்பார். * பேட்டர் பந்தில் பந்து பட்டதாக நினைத்து, விக்கெட் கீப்பர் அவுட் கேட்க, அம்பயர் கொடுத்து விடுகிறார். பேட்டர் அப்பீல் செய்யும் போது, பேடில் பட்டது தெரியவந்தால் அவுட் திரும்ப பெறப்படும். அடுத்து 'எல்.பி.டபிள்யு.,' சோதனை செய்யும் போது, அம்பயர்ஸ் கால் என இருந்தாலும் புதிய விதியின் படி, அவுட் தரப்படும்.* ஒருநாள் போட்டிகளில் இரு புதிய பந்து (தலா 25 ஓவர்கள்) பயன்படுத்தப்படுகிறது. இனிமேல் தலா 17 ஓவர்கள் மட்டும் இரு பந்து பயன்படுத்தப்படும். பின் இந்த இரண்டில் ஏதாவது ஒரு பந்தில் மட்டும், கடைசி 16 ஓவர்கள் வீசப்படும். இதனால் பவுலர்கள் பந்தை 'சுவிங்' செய்யலாம்.
16-Jun-2025