உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தன்னம்பிக்கை தந்த காம்பிர் * ஆகாஷ் தீப் பெருமிதம்

தன்னம்பிக்கை தந்த காம்பிர் * ஆகாஷ் தீப் பெருமிதம்

புதுடில்லி: ''என் திறமை மீது, பயிற்சியாளர் காம்பிர், என்னை விட அதிக நம்பிக்கை வைத்திருந்தார்,'' என ஆகாஷ் தீப் தெரிவித்துஉள்ளார்.இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் 29. இதுவரை 10 டெஸ்டில் 28 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான பர்மிங்காம் டெஸ்டில், 10 விக்கெட் சாய்த்தார். ஓவல் டெஸ்டில் 66 ரன் எடுத்தார். மொத்தம் 13 விக்கெட் சாய்த்து, இந்திய அணி வெற்றிக்கு கைகொடுத்தார். இதுகுறித்து ஆகாஷ் தீப் கூறியது: இந்திய அணி பயிற்சியாளர் காம்பிர், மிகவும் ஆர்வம் கொண்டவர். எப்போதும் வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார். என்னை நான் நம்பியதை விட, எனது பவுலிங், பேட்டிங் திறமை மீது அவர் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். 'உனது திறமை குறித்து உனக்கு அதிகம் தெரியாது, எப்போதும் அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடினால், உன்னால் எதையும் சாதிக்க முடியும்,' என உற்சாகம் தந்தார்.சுப்மனுக்கு பாராட்டுசுப்மன் கில் புதிய கேப்டன் அல்ல. ஐ.பி.எல்., தொடரில் ஏற்கனவே கேப்டனாக உள்ளார். இந்த அனுபவம் அவருக்கு, இங்கிலாந்தில் நன்கு கைகொடுத்தது. சக வீரர்களுக்கு மிகவும் ஆதரவாக உள்ளார். நாம் சோர்ந்திருக்கும் நேரங்களில் கேப்டனின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில், அது மிகப்பெரிய உற்சாகத்தை கொடுக்கும். போட்டிகளில் சிறப்பாக செயல்பட துாண்டுகோலாக அமையும். கடந்த ஆண்டு துலீப் டிராபில் இவரது அணியில், விளையாடினேன். அதிக திட்டங்கள் வைத்துள்ளார். அமைதியாக செயல்படுவதால், களத்தில் சரியான முடிவு எடுக்க உதவுகிறது. மைதானத்தில் பவுண்டரிகளை தடுக்க 'டைவ்' அடிப்பது, பீல்டிங் செய்யும் போது காயம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அதேநேரம், 'பிட்னஸ்', பயிற்சியில் காயமடைவதை முடிந்தவரை குறைத்துக் கொள்ள முயற்சித்து வருகிறேன். இதனால் தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடரில் முழுமையாக பங்கேற்க முடியாமல் போனது. மற்றபடி டெஸ்ட் தவிர, ஒருநாள், 'டி-20'ல் விளையாடுவது தேர்வாளர்கள் கையில் தான் உள்ளது. அனுபவம் வாய்ந்த அவர்கள், தேர்வு செய்தால் விளையாட தயாராக உள்ளேன். என்னைப் பொறுத்தவரையில் எவ்வித கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, வாய்ப்பு கிடைத்தால் திறமை வெளிப்படுத்த தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். எல்லோரும் எதிரணிஆகாஷ் தீப் கூறுகையில்,'' போட்டியில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த, பயிற்சி மிக முக்கியம். இதனால் வலைப்பயிற்சியில் எப்போது பந்து வீசினாலும், எதிரில் நிற்பது எதிரணி வீரர் என்று நினைத்துக் கொள்வேன். ஜெய்ஸ்வாலுக்கு பந்து வீசினால் கூட, அவரை ஜோ ரூட் அல்லது டக்கெட் என நினைத்து, எப்படி அவுட்டாக்குவது என திட்டமிட்டு பவுலிங் செய்வேன்,'' என்றார்.அக்கா மகிழ்ச்சிஆகாஷ் தீப் அக்கா அகாந்த் ஜோதி சிங், குடல் பகுதி 'கேன்சரால்' அவதிப்படுகிறார். இங்கிலாந்தில் இருந்து திரும்பியதும், லக்னோ சென்று தனது அக்காவை சந்தித்தார். இதுகுறித்து கூறுகையில்,'' அனைவரையும் போல அக்காவின் சிகிச்சை கடினமாக உள்ளது. சில நேரங்களில் வலியால் அவதிப்படுகிறார். உடலில் பல சிக்கல் இருந்தாலும், நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது, அதையெல்லாம் மறந்து விடுவோம். இதுபோல, கடந்த இரு மாதங்கள் எனது விளையாட்டினை பார்த்து, உற்சாகமாக இருந்தார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ