உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்தியா-ஜப்பான் பலப்பரீட்சை: ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்தியா-ஜப்பான் பலப்பரீட்சை: ரசிகர்கள் மகிழ்ச்சி

புதுடில்லி: இந்தியா-ஜப்பான் நாடுகளின் 75 ஆண்டு துாதரக உறவை கொண்டாடும் வகையில் இரு அணிகளும் முதன் முறையாக 'டி-20' போட்டியில் மோத உள்ளன. வரலாற்று சிறப்பு வாய்ந்த இப்போட்டி, வரும் 22ல், ஜப்பானின் சனோ நகரில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்கு சுஜுகி கோப்பை என பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜப்பான் அணி கேப்டன் கடோவாகி-பிளமிங் 30, கூறியது:ஆப்கானிஸ்தான், நேபாளம் போன்ற அணிகள் ஜப்பான் வருகின்றன. இதெல்லாம் நடக்குமா என சில ஆண்டு முன்புவரை யோசித்தோம். தற்போது, இந்திய அணிக்கு எதிராக விளையாட உள்ளோம். இப்போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பவுலிங், பேட்டிங் என அனைத்து பிரிவிலும் சிறப்பான, உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்டுள்ளது இந்தியா. இவர்களுக்கு எதிராக எங்களால் முடிந்தவரை போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.17 வயது வீரர் ஹிரா ஹின்ஸ் கூறுகையில்,'' பேஸ் பால் விளையாட்டின் ஆதிக்கம் நிறைந்த ஜப்பானில், இந்தியாவுக்கு எதிரான போட்டி, கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vasan
செப் 12, 2026 10:47

இந்த போட்டியில் வெற்றி வாகை சூட ஜப்பான் அணிக்கு வாய்ப்பு அதிகம்.


Thiru, Coimbatore
செப் 12, 2026 15:19

உண்மையில் ஜப்பான் அணி வென்றால் இந்தியர்களுமே மகிழ்ச்சி தான் அடைவோம்....நமக்கு மிகவும் நம்பத்தகுந்த கூட்டாளியாக என்றும் இருக்கும் நாடு நம்மை கிரிக்கெட்டில் வென்றால் அங்கு கிரிக்கெட் வளர்ச்சி நிச்சயமாக உருவாகும் ஏற்கனவே கபடி அணியும் அங்கே உருவாகி உள்ளது....


புதிய வீடியோ