உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தோல்வி சோகத்தில் நியூசிலாந்து * கேப்டன் சான்ட்னர் ஏமாற்றம்

தோல்வி சோகத்தில் நியூசிலாந்து * கேப்டன் சான்ட்னர் ஏமாற்றம்

துபாய்: ''சாம்பியன்ஸ் டிராபி பைனலில் ரோகித் சர்மாவின் பேட்டிங், எங்களுக்கு கசப்பான முடிவைத் தந்துவிட்டது,'' என சான்ட்னர் தெரிவித்துள்ளார்.ஐ.சி.சி., தொடரில் ஐந்தாவது முறையாக பைனலில் தோற்றது நியூசிலாந்து. கடந்த 2009 ல் சாம்பியன்ஸ் டிராபி (ஆஸி.,), 2015 (ஆஸி.,), 2019ல் (இங்கிலாந்து) ஒருநாள் உலக கோப்பை தொடர், 2021ல் 'டி-20' (ஆஸி.,) உலக கோப்பையை தொடர்ந்து மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் தோல்வியடைந்தது.இதுகுறித்து நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னர் கூறியது:சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பெருமையாக உள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டி என்றால் எப்போதும் சவாலானது தான். தவிர அரையிறுதியில் விளையாடிய லாகூர் ஆடுகளத்தை விட, துபாய் மைதானம் வித்தியாசமானது. இதற்குத் தயாராகவே இருந்தோம். பைனலில் அவ்வளவு எளிதாக விட்டுத்தரவில்லை. இந்திய அணிக்கு எதிராக போட்டி முழுவதும் போராடினோம். அதேநேரம் ஒரு சில தருணங்களால் போட்டி எங்களிடம் இருந்து நழுவியது.தவிர, ரோகித் சர்மாவின் பேட்டிங்கும், போட்டியை எங்களிடம் இருந்து பறித்து விட்டது. இந்திய அணியினர் துபாய் சூழல் குறித்து சிறப்பாக தெரிந்து வைத்திருந்தனர். பல போட்டிகளில் இங்கு வெற்றி பெற்றிருந்தனர். கடைசியில் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு கசப்பான முடிவாக அமைந்தது.எங்களது முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி, தோள்பட்டை காயத்தால் பைனலில் துரதிருஷ்டவசமாக விளையாட முடியாமல் போனது, கலக்கத்தை ஏற்படுத்தியது.இருப்பினும், இத்தொடரில் எங்களுக்கு மறக்க முடியாத சில தருணங்கள் இருக்கும் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sridhar
மார் 11, 2025 18:35

மலையோடு சிறு கல் மோதினால் என்ன ஆகும் , அது தான் ஆச்சு . இது அவருக்கு முன்னமே தெரியாதா .


கத்தரிக்காய் வியாபாரி
மார் 11, 2025 17:23

சான்டநர் ஒரு திறமையான கேப்டன். சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு இவரை கேப்டனாக நியமிக்கலாம்.


Ramaswamy Jayaraman
மார் 11, 2025 15:01

Both the teams have very good batters, bowlers and the best fielders in the world. some catches are stunning. on the day of the match, always better than the best team wins. If you put in all your hard work and effort, a pinch of luck should favour you, if you want to be a winner in the final.


Minimole P C
மார் 11, 2025 08:32

For India also Bumrah was not there. If he was available Indias win would be more easy and many matches would have been one sided. India has more tallented players than Newziland which is exposed now . That is all.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை