ராகுல் சஹார் 8 விக்கெட் * தகர்ந்தது 166 ஆண்டு சாதனை
சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்தில் கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிசன் 1 தொடர் நடக்கிறது. சர்ரே, ஹாம்ப்சயர் அணிகள் மோதிய போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்தது. சர்ரே அணிக்காக அறிமுகம் ஆனார் இந்தியாவின் ராகுல் சஹார்.முதல் இன்னிங்சில் சர்ரே அணி 147, ஹாம்ப்சயர் 248 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் சர்ரே அணி 281 ரன் எடுத்தது. 181 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது ஹாம்ப்சயர் அணி.சுழலில் மிரட்டிய ராகுல் சஹார், அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த, 160 ரன்னுக்கு சுருண்டது ஹாம்ப்சயர். சர்ரே அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.சர்ரே அணியின் ராகுல் சஹார், 51 ரன்னுக்கு 8 விக்கெட் சாய்த்தார். இதையடுத்து 166 ஆண்டு சர்ரே கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட் சாய்த்த அறிமுக பவுலர் ஆனார் ராகுல் சஹார். முன்னதாக 1859ல் வில்லியன் 61/7 விக்கெட் சாய்த்து இருந்தார்.