புதுடில்லி: ''ராகுலுக்கு முன்பாக அக்சர் படேல் களமிறக்கப்படுவது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்கின்றன. முதல் இரு போட்டியில் இந்தியா வென்றது. பேட்டிங் ஆர்டரில் ஐந்தாவது இடத்தில் வந்த அக்சர் படேல், 52, 41 ரன் எடுத்தார். கடந்த 2023 உலக கோப்பை தொடரில் ஐந்தாவது இடத்தில் களமிறங்கி வெற்றிக்கு கைகொடுத்த ராகுல் (452 ரன்) இம்முறை, 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ரிஷாப் பன்ட், அணியில் சேர்க்கப்படவில்லை. மாற்று வீரராக உள்ளார். 'கேம் சேஞ்சராக' திகழும் ரிஷாப்பை, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் இன்னும் அணியில் சேர்க்காமல் ஏன் இப்படி வைத்துள்ளனர் என விமர்சனம் எழுந்துள்ளன. இதுகுறித்து இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ''ரிஷாப்பை மாற்று வீரராக வைத்திருப்பது குறித்து யோசிக்க வேண்டும். இதுகுறித்து பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும்,'' என்றார்.காம்பிர் காரணமாநிர்வாகம் தரப்பில் ஒருவர் கூறுகையில், ''பயிற்சியாளர் காம்பிர் வெற்றிக்கு என்ன தேவை என்பதை அதிகம் யோசிக்கிறார். ஆறாவது இடத்துக்கு பொருத்தமான வீரரை தேடுகிறார். அக்சர் ஐந்தாவது இடத்தில் சிறப்பாக விளையாடுவதால், ரிஷாப் இடம் பெறுவது கடினம்,'' என்றார்.புதிய முயற்சி தேவையாஇந்திய அணி தேர்வாளர் ஒருவர் கூறுகையில்,'' துவக்க வீரர், ஐந்தாவது இடம் என இரண்டிலும் ராகுல் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவரை, பவுலிங் ஆல் ரவுண்டருக்கும் கீழாக பேட்டிங் செய்ய அனுப்புவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தவிர கடந்த இரு போட்டியிலும் அக்சர் களமிறங்கிய போது, இந்திய அணி வலுவான நிலையில் இருந்தது. ஒருவேளை 20 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தால் அக்சரை அனுப்புவரா, அல்லது ராகுலை முன்னதாக களமிறக்குவாரா காம்பிர். எளிதான சூழல் என்றால் அக்சர், கடினமான சூழல் என்றால் ராகுலா,'' என்றார்.சிறப்பான ஆட்டம்கட்டாக் ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ''ஒவ்வொரு முறை களமிறங்கும் போதும், சிறப்பாக விளையாட வேண்டும் என்று தான் நினைப்பேன். சில நேரங்களில் இது நடக்கும். சில சமயத்தில் நடக்காமல் போகலாம். ஆனால், நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதில் தெளிவாக இருப்பேன்,'' என்றார்.