ரிங்கு சிங் தந்தை காலமானார்
அலிகார்: இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் 28. இவரது தந்தை கான்சந்த் சிங். கல்லீரல் கேன்சரால் அவதிப்பட்டு வந்தார். கிரேட்டர் நொய்டாவில் (உ.பி.,) உள்ள யதார்த் மருத்துவமனையில் சிகிச்சை தரப்பட்டது. இவரைக் காண சென்னையில் இருந்து சென்ற ரிங்கு சிங், ஜிம்பாப்வே போட்டிக்கு முன் இந்திய அணியுடன் இணைந்தார்.தீவிர சிகிச்சையில் இருந்த கான்சந்த் சிங், நேற்று காலை காலமானார். இதையடுத்து ரிங்கு சிங், நேற்று அலிகார் சென்று, தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார். தேசத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நாளை நடக்க உள்ள வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான 'சூப்பர்-8' போட்டியில் பங்கேற்க, கோல்கட்டா செல்ல திட்டமிட்டுள்ளார்.