ஐந்து விக்கெட் சாய்த்தார் பும்ரா * அரைசதம் கடந்தார் ராகுல்
லார்ட்ஸ்: லார்ட்ஸ் டெஸ்டில் வேகத்தில் மிரட்டிய பும்ரா, 5 விக்கெட் சாய்த்தார். இந்தியாவின் ராகுல் அரைசதம் கடந்தார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன் - சச்சின் டிராபி') பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என சமனில் உள்ளது.மூன்றாவது டெஸ்ட் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி, 251/4 ரன் எடுத்திருந்தது. ஜோ ரூட் (99), ஸ்டோக்ஸ் (39) அவுட்டாகாமல் இருந்தனர்.'போல்டு' பும்ராநேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. பும்ரா பந்தில் பவுண்டரி அடித்த ரூட், சதம் கடந்தார். பும்ரா 'வேகத்தில்' ஸ்டோக்ஸ் (44) போல்டானார். தனது 21வது ஓவரை வீசிய பும்ரா, முதல் பந்தில் ரூட்டை (104) போல்டாக்கினார். அடுத்த பந்தில் வோக்சை, 'டக்' அவுட்டாக்கினார். இங்கிலாந்து அணி 271/7 என திணறியது. ராகுல் தயவில் 'கண்டம்' தப்பிய ஜேமி ஸ்மித், கார்ஸ் இணைந்து அணியை மீட்டனர். ஸ்மித் அரைசதம் எட்டினார். 8வது விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்த போது, சிராஜ் 'வேகத்தில்' வீழ்ந்தார் ஸ்மித் (51). பின் ஜோப்ரா ஆர்ச்சரை (4) போல்டாக்கிய பும்ரா, தனது 5வது விக்கெட்டை பெற்றார். அரைசதம் கடந்த கார்ஸ் (56), சிராஜிடம் வீழ்ந்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன் எடுத்தது. ஜெய்ஸ்வால் 'அவுட்'பின் களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், ராகுல் ஜோடி துவக்கம் தந்தது. வோக்ஸ் வீசிய முதல் ஓவரில் ஜெய்ஸ்வால், 3 பவுண்டரி அடித்தார். அடுத்து வந்த ஆர்ச்சர் 'வேகத்தில்' ஜெய்ஸ்வால் (13) அவுட்டானார். கருண் நாயர் 40, சுப்மன் 16 ரன் எடுத்தனர். அடுத்து ராகுல், ரிஷாப் இணைந்தனர். ராகுல் அரைசதம் எட்டினார். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 145/3 ரன் எடுத்து, 242 ரன் பின் தங்கி இருந்தது. ராகுல் (53), ரிஷாப் (19) அவுட்டாகாமல் இருந்தனர்.பும்ரா '450'ஸ்டோக்சை போல்டாக்கிய பும்ரா, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 450 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். இவரை டெஸ்டில் 215 (47 போட்டி), ஒருநாள் அரங்கில் 149 (89), 'டி-20'ல் 89 (70) என 206 போட்டியில் 453 விக்கெட் சாய்த்துள்ளார். 11 வது முறைஜோ ரூட்டை போல்டாக்கிய பும்ரா, டெஸ்டில் 11வது முறையாக அவுட்டாக்கினார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் கம்மின்சிடம் 11, ஹேசல்வுட்டிடம் 10 முறை ரூட் அவுட்டானார். * சர்வதேச அரங்கில் பும்ரா, அதிகபட்சம் 15 முறை (25 போட்டி) ரூட்டை வீழ்த்தியுள்ளார். கம்மின்ஸ் (14 முறை, 31 போட்டி), இந்தியாவின் ஜடேஜா (43ல் 13 முறை) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.முதல் பவுலர்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21ல் துவங்கியது. தற்போது 4வது சீசன் நடக்கிறது. இதில் 5 அல்லது அதற்கும் மேல் விக்கெட் வீழ்த்திய பவுலர்களில் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இதுவரை இவர் 12 முறை இதுபோல விக்கெட் சாய்த்தார். கபில் தேவை முந்தினார்அன்னிய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 5 அல்லது அதற்கும் மேல் விக்கெட் சாய்த்த இந்திய பவுலர்களில் கபில் தேவை (12) முந்தி, முதலிடம் பிடித்தார் பும்ரா (13). ஒட்டுமொத்தமாக இதுவரை பும்ரா 15 முறை இதுபோல அசத்தினார்.நழுவவிட்ட ராகுல்நேற்று ஸ்மித் 5 ரன் எடுத்திருந்த போது, சிராஜ் பந்தை எதிர்கொண்டார். பந்து இவரது பேட்டில் பட்டு 'சிலிப்' பகுதிக்கு சென்றது. எளிதாக கிடைத்த இந்த 'கேட்ச்சை' ராகுல் நழுவவிட்டார். கடைசியில் ஸ்மித் 51 ரன் அடித்து, இந்தியாவுக்கு தொல்லை தந்தார்.ஸ்டோக்ஸ் காயமாஇங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ். முதல் நாள் பேட்டிங் செய்த போது, தொடை பின்பகுதி காயத்தால் அவதிப்பட்டார். இதற்காக ஸ்கேன் செய்யப்படும் என எதிர்பார்த்த நிலையில், நேற்று பேட்டிங்கை தொடர்ந்தார். எனினும் அடுத்த டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் தான்.கேன்சருக்கு நிதிஇங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் ஆன்ட்ரூ ஸ்டிராஸ் 48. இவரது மனைவி ருத். நுரையீரல் கேன்சரால் மரணம் அடைந்தார். இவரது பெயரில் அறக்கட்டளை நிறுவிய ஸ்டிராஸ், கேன்சரால் பாதிக்கப்பட்ட 3500க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு உதவி, 1000 பேருக்கும் மேல் சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி தந்து வருகிறார். இதற்கு நிதி சேர்க்கும் வகையில் ஜூலை 11ல் நடக்கும் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள், அம்பயர், ரசிகர்கள் 'பிங்க்' நிற தொப்பி, உடை அணிந்து ஆதரவு தருகின்றனர். நேற்று மைதானம் வந்த ஸ்டிராஸ், மகன்கள் இணைந்து மணி அடித்து போட்டியை துவக்கி வைத்தனர். இந்தியா, இங்கிலாந்து அணியினர் இதய வடிவில் அணிவகுத்து ஆதரவு தெரிவித்தனர். அதிவேக '1000'டெஸ்டில் அதிவேகமாக 1000 ரன் எடுத்த இங்கிலாந்தின் ஜமை ஸ்மித், குயின்டன் டி காக் (தெ.ஆப்.,) சாதனையை சமன் செய்தார். இருவரும் தலா 21 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டினர்.* குறைந்த பந்தில் (1303) 1000 ரன் எடுத்த வீரர் ஆனார் ஸ்மித். 407 ரன்இங்கிலாந்து அணி விக்கெட் கீப்பர் ஸ்மித். இந்தியாவுக்கு எதிரான முதல் 3 டெஸ்டில் 407 ரன் எடுத்துள்ளார். ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்த 3வது இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஆனார். முதல் இரு இடத்தில் அலெக் ஸ்டீவர்ட் (465, தெ.ஆப்., 1998), லெஸ் ஆமெஸ் (417, வெ.இண்டீஸ், 1930) உள்ளனர்.ஜோடாவுக்கு அஞ்சலிபோர்ச்சுகல் அணி கால்பந்து வீரர்கள் தியோகோ ஜோடா 28, ஆன்ரியா சில்வா 25. சகோதரர்கள் ஆன இவர்கள் ஸ்பெயினில் காரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் பலியாகினர். 20ம் எண் கொண்ட ஜெர்சி அணிந்து விளையாடினார் ஜோடா. இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று ஸ்மித்தை அவுட்டாக்கிய சிராஜ், 20 என சைகை செய்து வானத்தை நோக்கி காண்பித்தார்.தொடரும் பந்து சர்ச்சைஇங்கிலாந்தில் பயன்படுத்தப்படும் 'டியூக்' நிறுவன பந்துகள் விரைவில் உறுதித்தன்மையை இழந்து விடுகின்றன. அடிக்கடி பந்துகளை மாற்ற வேண்டியுள்ளது. புதிய பந்தில் நேற்று பும்ரா, 3 விக்கெட் சாய்த்தார். 10 ஓவர் மட்டும் வீசப்பட்ட நிலையில், திடீரென பந்தை மாற்ற வேண்டும் என கேப்டன் சுப்மன் கில் வேண்டுகோள் விடுத்தார். இது ஆச்சரியம் தந்தது.சுப்மன் கோரிக்கையை ஏற்ற அம்பயர்கள், இந்திய பவுலரிடம் ஆலோசிக்காமல் பந்தை மாற்றினர். இதற்கு சுப்மன் கில் எதிர்ப்பு தெரிவித்தார். அடுத்த சிறிது நேரத்தில் மாற்றப்பட்ட பந்தின் நிலையும் மாறியது. மறுபடியும் வேறு பந்து பயன்படுத்தப்பட்டது.211 'கேட்ச்'கருண் நாயர் அடித்த பந்தை பிடித்த இங்கிலாந்தின் ஜோ ரூட், டெஸ்ட் அரங்கில் அதிக 'கேட்ச்' செய்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இதுவரை 156 டெஸ்டில், 211 'கேட்ச்' செய்துள்ளார். இந்தியாவின் டிராவிட் (210 'கேட்ச்', 164 போட்டி) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.